Thursday, 23 Feb 2012
About Us PDF Print E-mail

வணக்கம்!

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு…………….!

இவ்விணையம் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றது.

இன்றைய நவநாகரீக உலகில் தொழில் நுட்பம் மேலோங்கியிருகின்ற இக்காலத்தினிலே லட்சக்கணக்கான இணையத்தளங்கள் இணைய வலயங்களிலே பற்பல தகவல்களையும் செய்திகளையும் வெளிக்கொணர்ந்து கொண்டேயிருக்கின்றன. இவ்வேளையில் குறிப்பாக தமிழ் மொழியிலும் பல ஆயிரக்கணக்கான இணையங்கள் இவ்வலைப்பின்னலிலே வலம் வந்து தமிழுலகிற்கு அளப்பரிய சேவைகளை செய்துகொண்டிருக்கின்றன என்பதனை நீங்கள் அறிவீர்கள்.

அந்த வரிசையிலே நாங்களும் ஒரு சிறு துளியான தகவல்களை வெளிக்

கொணர முயற்ச்சிக்கின்றோம். இத் தளமானது அதிகமாக ஈழத்தின் கிழக்குமாகாண தகவல்களையும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பற்பல செய்திகளையும் தரவுகளையும் வெளிக்கொண்டு வரும்.

அன்பான வாசகர்களே! நீங்களும் உங்களாலான தகவல்கள் கட்டுரைகள்

மற்றும் உங்கள் ஊர் பற்றிய வரலாறுகளையும் படங்களையும் தந்துதவி இவ்விணையத்தை வலுப்படுத்தினால் மிக உதவியாக அமையும். உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அதே வேளை ஆக்கபூர்வமான உங்கள் விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

உங்கள் வரவிற்கு நன்றி மீண்டும் வருக…….

வணக்கம்

என்றும் அன்புடன்

கிழக்கிலங்கை இணையக்குழுமம்

 
Content View Hits : 23214